Grassfield Blogs Aggregator
Hot Posts
Recent Comments
See more...
New blogs
புத்தக அலமாரியில், நாட்டாரியல் வரிசை : ” வயல்காட்டு இசக்கி ”நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றிவருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.– அ. கா. பெருமாள்– காலச்சுவடு– ₹325Coins
vishnumathan | Site Title | 1 year ago

புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் ”அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்திய ‘ஆறுதல் அணங்குகள்’ குறித்த நூல்கள், சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளின் நாவல்கள், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி முதலியவை உருவான விதம், அகராதி, சொற்களஞ்சிய உருவாக்கங்களில் மறைக்கப்பட்ட பெண் பங்களிப்பு, பிரசித்திபெற்ற மேற்கத்திய நூலகங்கள் பற்றிய அனுபவம், எழுத்துத் திருட்டு, ஆசிரியர் வாசித்த நாவல்கள், அ-புனைவுகள், புத்தகம் பற்றிய புத்தகங்கள், உலக அளவில் பரிசுகளை வென்ற, வெல்லாத நூல்கள் குறித்த அறிமுகங்கள் எனப் பல்வேறு நதிகளில் நீந்திக் கரையேறுகிறது இந்நூல். புத்தகத்தின் மீதான தன் தீராக் காதலை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வாசகரிடத்தில் வெகு சுவாரசியமாகக் கடத்துகிறார் சுகிர்தராஜா. – சச்சிதானந்தன் சுகிர்தராஜா – காலச்சுவடு₹200Coins
vishnumathan | Site Title | 1 year ago

Show your ❤️ by following us..

Display banner in your blog
Trending Categories
Blogs published recently
Authors published recently
Readers commented recently
GrassField Blog Aggregator தமிழ் வலைப் பதிவு திரட்டி