Grassfield Blogs Aggregator
Hot Posts
Recent Comments
See more...
New blogs

Recent posts from this blog

புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” சோற்றுக்கும் சோஷலிசத்துக்கும் இடையில் ” “நீங்கள் பணியாற்றும் ஊரில் மதக்கலவரம் / தீண்டாமைக் கொடுமை நடக்க எப்படி அனுமதித்தீர்கள்?” என்ற கேள்வியை, இயக்க செயற்பாட்டாளர்களைப் பார்த்து யாரும் எழுப்புவதில்லை என்பது மட்டுமல்ல, நமக்கு நாமே அப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வதும் இல்லை. “அரசே நடவடிக்கை எடு” என்று பத்துப் பேர் அட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றால் பாசிசம் வீழ்ந்துவிடாது. பெருந்திரளான மக்கள் களத்திற்கு வரும்போது மட்டும்தான் அரசின் மீது கருத்து ரீதியான நிர்ப்பந்தத்தைக் கூட ஏற்படுத்த முடியும்.– மருதையன்– வாசகசாலை₹200Coins
vishnumathan | Site Title | 1 year ago

புத்தக அலமாரியில், நாட்டாரியல் வரிசை : ” வயல்காட்டு இசக்கி ”நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றிவருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.– அ. கா. பெருமாள்– காலச்சுவடு– ₹325Coins
vishnumathan | Site Title | 1 year ago

புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் ”அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்திய ‘ஆறுதல் அணங்குகள்’ குறித்த நூல்கள், சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளின் நாவல்கள், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி முதலியவை உருவான விதம், அகராதி, சொற்களஞ்சிய உருவாக்கங்களில் மறைக்கப்பட்ட பெண் பங்களிப்பு, பிரசித்திபெற்ற மேற்கத்திய நூலகங்கள் பற்றிய அனுபவம், எழுத்துத் திருட்டு, ஆசிரியர் வாசித்த நாவல்கள், அ-புனைவுகள், புத்தகம் பற்றிய புத்தகங்கள், உலக அளவில் பரிசுகளை வென்ற, வெல்லாத நூல்கள் குறித்த அறிமுகங்கள் எனப் பல்வேறு நதிகளில் நீந்திக் கரையேறுகிறது இந்நூல். புத்தகத்தின் மீதான தன் தீராக் காதலை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வாசகரிடத்தில் வெகு சுவாரசியமாகக் கடத்துகிறார் சுகிர்தராஜா. – சச்சிதானந்தன் சுகிர்தராஜா – காலச்சுவடு₹200Coins
vishnumathan | Site Title | 2 years ago

புத்தக அலமாரியில், நாவல் வரிசை : ” பட்ட விரட்டி ”காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பத்தில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல். அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்கு குற்ற உணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தான் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமாக மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலக்கட்டங்களில் இக்கதை கடந்து செல்கிறது.பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய- அமெரிக்கரான காலித் ஹூசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல்.– காலித் ஹுசைனி– எதிர் வெளியீடு₹450Coins
vishnumathan | Site Title | 2 years ago

புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” சூத்திரர்கள் யார்? ”டாக்டர். அம்பேத்கார் அவர்கள், கேள்விஞானத்தில் இருந்தோ அல்லது சமுதாயத்தில் நிலவிவந்த எண்ணங்களின் அடிப்படையிலிருந்தோ எந்த முடிவுக்கும் வரவில்லை. பதினைந்து ஆண்டுகள் வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இன்னும் பண்டைய பலநூல்கள், மேலைநாட்டினரின் இந்திய ஆர்ய சமுதாய நிலைபற்றிய ஆய்வுநூல்கள், வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இவற்றைப் பற்றிய மேலைநாட்டு, இந்திய ஆய்வு வல்லுநர்களின் அரும்படைப்புகள் இவற்றை எல்லாம் முழுமையாகக் கற்று ஆய்வுகள் செய்து, இந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே தனது இறுதியான உறுதியான முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.– S.K.T. ராமச்சந்திரன் M.A.,M.P., (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)– பி.ஆர். அம்பேத்கர்– தமிழில்: பெ. சுந்தரம்– ₹200 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்புத்தக அலமாரி( ஒவ்வொரு இல்லமும் )9488000561For whatsapp:https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg
vishnumathan | Site Title | 2 years ago

புத்தக அலமாரியில், சிறுகதை வரிசை : ” காலப்போக்கில் ”இதனை வாசிக்கின்றவர்கள் எவரும் எந்த ஒரு அத்தியாத்தையும் ” இது எனக்கு பொருந்தாத அத்தியாயம் ” என்று தன்னை விலக்கிக் கொள்ள இயலாது. ஏனெனில் இனிமேல் இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பல உறுதியான சிறந்த சிந்தனைகளோடும், புத்துணர்ச்சியோடும் தினம் காலை எழுகின்ற உங்களை சம்பட்டியால் அடித்து, நீங்களும் இந்த ஆட்டு மந்தையில் ஒருவர்தான்! என்ற உங்களின் நிலையை அழுத்தி சொல்லும் இந்த சமூகத்தைப் பற்றியது இந்த படைப்பு!. – கவிதாசன்– shanlax publication₹100 இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்புத்தக அலமாரி( ஒவ்வொரு இல்லமும் )9488000561For whatsapp:https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg
vishnumathan | Site Title | 2 years ago

புத்தக அலமாரியில், கட்டுரை வரிசை : ” கழிவறை இருக்கை ”இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.திருமணத்தில் வெற்றி பெற்றவர்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதையும் திருமண உறவில் தோல்வி அடைந்தவர்கள் ஏன் தோல்வி அடைந்தீர் என்பதையும் வெளிப்படையாக பேசுங்கள் என்கிறார். இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் அதற்கான ஊக்கம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறையில் பெற்றோர்களின் பங்கு என்ற ஒரு கட்டுரைக்காகவே இந்த புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கலாம்.பெண்கள் பேசத் தயங்குகிற விஷயத்தை ஒரு பெண் பேசி இருக்கிறார் அதனால் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டும்.பெண்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பேசி இருக்கிறார் எனவே பெண்களும் அவசியம் படிக்க வேண்டும்– லதா– knowrap imprints₹225₹180(20% discount) இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும்புத்தக அலமாரி( ஒவ்வொரு இல்லமும் )9488000561For whatsapp:https://chat.whatsapp.com/HUhJl5bcN7bIrIEPfvDne7For telegram : https://t.me/joinchat/LpIznBFwFFrai9cyfebPbg
vishnumathan | Site Title | 2 years ago

Show your ❤️ by following us..

Display banner in your blog
Trending Categories
Blogs published recently
Authors published recently
Readers commented recently
GrassField Blog Aggregator தமிழ் வலைப் பதிவு திரட்டி